×

ஊராட்சிகளில் பணிகள் செய்ய ஊராட்சி மன்றம் ஒப்புதல் பெறக்கோரி மனு

சிவகங்கை, டிச.16: ஊராட்சி மன்றத்தின் ஒப்புதலும், தீர்மானத்தின் அடிப்படையிலேயே பணிகள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2019-20ம் ஆண்டிற்கான பொருட்கூறு தொகை இன்னும் வழங்கப்படவில்லை.
 
இதனால் 2020-21ம் ஆண்டிற்கான பணிகள் தொடங்கப்பட வில்லை. இத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 6 வாரமாகவும், பணித்தள பொறுப்பாளர்களுக்கு 7 மாதமாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை.உடனடியாக தேவையான நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கான அரசாணை, கடிதங்கள் தபால் மூலம் வழங்க வேண்டும். திட்ட நிதியில் உள்ள உபரி நிதியை எடுத்து பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும். ஊராட்சி மன்றத்தின் ஒப்புதல் மற்றும் துர்மானத்தின் அடிப்படையிலேயே பணிகள் செய்யப்பட வேண்டும்.

ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி தலைவருக்கு தெரியாமல் ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை செய்யக்கூடாது. ஊராட்சியில் வீடு கட்டும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வை ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : Panchayats ,Panchayat Council ,
× RELATED நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்...