சென்னை : தமிழகத்தில் இன்றும் நாளையும் காய்ச்சல் தொடர்பாக மருத்துவமனைகளில் ஆய்வு நடத்துகிறது சுகாதாரத்துறை. 38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுக்கிறது சுகாதாரத்துறை.
