×

பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

மணப்பாறை, டிச.16: மணப்பாறை அருகேயுள்ள பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணையை எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், மாயனூர் கதவணையிலிருந்து பஞ்சப்பட்டி வழியாக பொன்னணியாறு அணை மற்றும் கண்ணூத்து அணை, மருங்கிகுளம் பகுதிக்கு மாயனூர் அணையிலிருந்து உபரி நீரை கொண்டு வர தற்போது அரசு உத்தேசித்து அதற்கான ஆய்வு பணிக்கு ரூ.40 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்க கோதாவரி-காவிரி-வைகை திட்டத்தை திண்டுக்கல் வழியாக செயல்படுத்தும்போது மணப்பாறை பகுதிக்கு அந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முன் வரவேண்டும். இதன் மூலம், வருடம் முழுவதும் இப்பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும் என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் சபியுல்லா, ஒன்றிய சேர்மன்கள் வையம்பட்டி குணசீலன், மருங்காபுரி பழனியாண்டி, செக்கணம் முன்னாள் ஊராட்சித் தலைவர் இன்னாசி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அருள்சுந்தரராஜன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெர்னாட் சாமிநாதன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளஞ்செழியன், வலசை சதீஷ், நிர்வாகிகள் முனவர் பாட்சா, அணியாப்பூர் செல்வம், தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த வக்கீல் முரளிகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Ponnaniyaru ,Kannuttu ,Mahesh ,
× RELATED பீகாரில் பெண் குழந்தையை ரூ.1500-க்கு...