×

பொது விநியோக திட்டத்தின்கீழ் சர்க்கரை பெறுவோர் கார்டுகளை அரிசி அட்டைகளாக மாற்றலாம்

தஞ்சை, டிச. 16: தஞ்சை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின்கீழ் சர்க்கரை குடும்ப அட்டைகளில் இருந்து அரிசி அட்டையாக மாற்றம் செய்வதற்கு தகுதியின் அடிப்படையில் மாற்றம் செய்து தரப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். பொது விநியோக திட்டத்தின்கீழ் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் தங்களது குடும்ப அட்டையை முன்னுரிமையற்ற அரிசி அட்டையாக மாற்றம் செய்ய கோரிய கோரிக்கையை ஏற்று சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றம் செய்து தர உணவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பொதுவிநியோக திட்டத்தின்கீழ் முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்குரிய மனுவை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வரும் 20ம் தேதிக்குள் Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். முன்னுரிமையற்ற சர்க்கரை குடும்ப அட்டைகளில இருந்து அரிசி அட்டையாக மாற்றம் செய்வதற்கு தகுதியின் அடிப்படையில் மாற்றம் செய்து தரப்படும்.

Tags : Sugar recipients ,
× RELATED உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்