×

வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி: பொது இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

சென்னை: வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்புகளோடு அதிக மக்கள் பாதிக்கப்படுவதாகவும், சிகிச்சை சேர்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குளிர் பிரதேசங்கள், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனையை நாடுங்கள்; அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுங்கள். சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு அறிகுறியோடு வந்தால், மாதிரிகளை சேகரித்து அனுப்ப வேண்டும். மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வோர் கவனமாக இருக்கவும், முகக் கவசம் அணியவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu Health Department ,Tamil Nadu ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...