×

இரண்டாம் தர கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.22.94 லட்சம் மோசடி செய்தவர் கைது


திருப்பூர், டிச.16: திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் (35) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘‘திருப்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (32) என்பவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக கூறி என்னிடம் பழகிவந்தார். கடந்த ஜனவரி மாதம் கோகுலகிருஷ்ணன் வங்கி பணியில் இருந்து விடுபட்டு விட்டதாக கூறினார். மேலும் அவர் 2 வங்கிகளிலிருந்து இரண்டாம் தர கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்வதாகவும், அந்த தொழிலை விரிவுபடுத்த ரூ.22 லட்சம் பணம் வேண்டுமெனவும் கேட்டார்.

நம்பிக்கை அடிப்படையில் ரூ.22 லட்சமும் அதன்பின் ரூ.94 ஆயிரம் என மொத்தம் ரூ.22.94 லட்சத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்தேன். பின்னர் அந்த பணத்தை கேட்டதற்கு கோகுலகிருஷ்ணன், என்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி தனிப்படை அமைத்து கோகுலகிருஷ்ணனை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவான கோகுலகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உளுந்தூர்பேட்டை விரைந்த தனிப்படை போலீசார் கோகுலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.

Tags : fraudster ,
× RELATED பேஸ்புக்கில் மோசடி வாலிபர் கைது