மக்கள் எதிர்பார்ப்பு முதல்வர் வருகை கரூர் நகரம் களை கட்டியது

கரூர், டிச. 16: தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் நகரம் களை கட்டியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாகவே கருர் நகரம் முழுதும் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கரூர் லைட்ஹவுஸ் கார்னர் முதல் தாந்தோணிமலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் வரை அதிமுக சார்பில் அனைத்து பகுதிகளிலும் அதிமுக கொடி கட்டுவதில் இருந்து அனைத்து வேலைப்பாடுகளும் நடைபெற்று வந்தன. இன்று காலை 11மணி முதல் 2மணி வரை பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் கரூர் நகரம் முழுதும் இந்த நிகழ்வின் காரணமாக களை கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: