×

நமது முயற்சிகளுக்கு நல்லூக்கம் ‘கொலோன் நூலக விசிட்’: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதள பதிவு

சென்னை: ஜெர்மனியில் உள்ள தமிழ்த்துறை நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்ட பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களை கொண்ட கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டேன். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதை தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு!

அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள டாக்டர் ஸ்வென் வோர்ட்மேன், ஷரோன் நாதன், டாரியா லாம்ப்கெட் ஆகியோரின் தமிழார்வத்தை கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன். சென்னை, மதுரையை தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த ‘கொலோன் நூலக விசிட்’ அமைந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Cologne Library ,K. Stalin ,Chennai ,Tamildurra Library ,Germany ,University of Cologne ,M. K. A ,Stalin ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...