×

இலங்கை துறைமுகத்தில் தமிழக மீனவர்களிடம் பறித்த படகுகள் உடைப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 123 படகுகள், யாழ்ப்பாணம் மாவட்டம் மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் அரசுடமையாக்கப்பட்ட 62 படகுகளை மட்டும் உடைத்து அகற்றும் நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வந்தது.

முதல்கட்டமாக பொக்லைன் மூலம் சிறிய நாட்டுப் படகுகளை உடைத்து அகற்றும் பணி நேற்று துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் இப்பணி நடைபெறுகிறது. இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்த மாதம் முதல் வாரத்தில் மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிட உள்ளதால், இந்த பணிகள் நடைபெறுவதாக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Sri Lanka ,SRI LANKA NAVY ,JAFFNA DISTRICT ,MAILITY ,PORT ,Government of Sri Lanka ,Bockline ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...