×

அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் ஜல்சக்தி மிஷன் திட்ட செயல்பாடுகள் மத்தியக்குழு ஆய்வு

வேலூர், டிச.16: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, கணியம்பாடி ஒன்றியங்களில் ஜல்சக்தி மிஷன் திட்ட செயல்பாடுகளை மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஜல்சக்தி மிஷன் திட்டத்தில் நாடு முழுவதும் ஊரகப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஜல்சக்தி மிஷன் திட்ட மத்திய குழுவை சேர்ந்த வாஷ் எக்ஸ்பர்ட் அம்பரீஷ், ஐஇசி எக்ஸ்பர்ட் அமித்ரஞ்சன் ஆகியோர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆலப்பாக்கம், அனத்தாங்கல், பள்ேளரி ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று காலை அணைக்கட்டு ஒன்றியம் விரிஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கணியம்பாடி ஒன்றியம் மோட்டுப்பாளையம், வல்லம் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் கிராம குடிநீர் குழுவினருடன் கலந்துரையாடினர். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி திட்ட செயற்பொறியாளர் சீனிவாசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராம்சேகர் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Ganyambadi Unions ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது ரூ.20.43 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு