தொடர் மழையால் ராஜா தோப்பு அணை நிரம்பியது கலெக்டர், எம்எல்ஏ மலர்தூவினர்

கே.வி.குப்பம்,டிச.16: லத்தேரி அருகே உள்ள ராஜா தோப்பு அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டியது. கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு நிரம்பியுள்ளது.  இந்நிலையில், நேற்று அணையிலிருந்து வரும் உபரிநீரை கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். இதையடுத்து அணையிலிருந்து மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரை கால்வாய் மூலம் கொண்டு சென்று ஏரிகளில் நிரப்பும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் ஏரியில் நடைபெறும் நீர் நிரப்பும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். இதில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், தாசில்தார் ராஜேஸ்வரி, பிடிஓக்கள் ரமேஷ்குமார், கலைச்செல்வி, விஏஓ கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம் லத்தேரி அருகே உள்ள ராஜா தோப்பு அணையை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று பார்வையிட்டார். உடன் எம்எல்ஏ லோகநாதன்.

Related Stories:

>