×

மேடையில் நடிகையின் இடுப்பை கிள்ளிய நடிகர்: இருவருக்கும் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

லக்னோ: போஜ்புரி நடிகர் பவன் சிங், நடிகை அஞ்சலி ராகவ் ஆகியோர், சமீபத்தில் லக்னோவில் நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது மேடையில் இருந்த அஞ்சலி ராகவ்வின் இடுப்பை பவன் சிங் தவறான முறையில் தொட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அவர்கள் நடித்த ‘சையா சேவா கரே’ என்ற ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அஞ்சலி ராகவ்வின் இடுப்பை குறிப்பிட்டு பேசிய பவன் சிங், திடீரென்று அவரது இடுப்பை கிள்ளுவது போன்றும், தொட்டு பேசுவது போன்றும் ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலானது. அப்போது அஞ்சலி ராகவ் கோபப்படாமல் சிரித்தது ரசிகர்களை கோபப்பட வைத்தது. உடனே சிலர் அஞ்சலி ராகவ்வை கண்டித்தனர்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அஞ்சலி ராகவ், ‘ஏன் மேடையிலேயே இதை தட்டிக் கேட்கவில்லை? ஏன் அந்த நடிகரை அறையவில்லை? அப்போது சிரித்தீர்களே, அதை ரசித்தீர்களா என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். ஒருவர் என் அனுமதியின்றி பொது இடத்தில் என்னை தொட்டால், அதை எப்படி நான் ரசிப்பேன்? அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை என்னால் சரியாக விளக்க முடியவில்லை. அப்போது நான் அதிக கோபம் கொண்டேன். மேடையிலேயே அழுதுவிட்டேன். ஆனால், அது ஒரு பொது நிகழ்ச்சி என்பதால், அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரிடம், என் ஆடையில் ஏதேனும் சிக்கியிருந்ததா என்று கேட்டேன். அதற்கு அவர், அதில் ஒன்றும் இல்லை என்று பதிலளித்தார்.

Tags : Lucknow ,Bhavan Singh ,Anjali Raghav ,Anjali Raghavin ,
× RELATED உத்தரகாண்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்!