×

சிக்கண்ணா கல்லூரியில் காய்கறி விதை கிட் வினியோகம்

திருப்பூர், ஆக.30: தமிழ்நாடு தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஆகியவை சார்பில் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ் பழ மரக்கன்றுகள் மற்றும் காய்கறி விதைத்தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் விநாயகமூர்த்தி துவக்கி வைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் புனிதவேணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரியிலுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கு 1500 பழமர நாற்றுகள், காய்கறி விதைத்தொகுப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பிரியதர்ஷினி, வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Chikanna College ,Tiruppur ,Tamil Nadu Horticulture-Mountain Crops Department ,Chikanna Government Arts College ,National Welfare Project Unit ,
× RELATED வரி செலுத்தாத 11 கடைகளுக்கு ‘சீல்’ உடுமலை நகராட்சி ஆணையர் அதிரடி