கீவ்: உக்ரைனின் டானுப் நதியின் முகத்துவாரத்தில் உக்ரைனின் கடற்படை கப்பல் சிம்பெரோபோல் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்தது. இதில் அதிவேகமாக சென்று தாக்குதல் நடத்தும் டிரோன் படகை பயன்படுத்தி தாக்கியதில் உக்ரேனிய கப்பல் மூழ்கியது என்று ரஷ்யா தெரிவித்தது.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன், இதில் கடற்படை ஊழியர் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர் என்று கூறியுள்ளது. ரஷ்யாவின் டிரோன்,ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் நடத்தப்பட்ட டிரோன், ஏவுகணை தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 23 பேர் பலியாகினர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
