- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தேரஜ்குமார்
- அனிஷா ஹுசைன்
- ஐஜி
- சிறப்புப் புலனாய்வுப் பிரிவு
- CBCID
- இன் ஐ. ஜி.
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
- லட்சுமி
- ஊழல் எதிர்ப்பு...
சென்னை: தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக இருந்த அனிஷா ஹூசைன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு பிரிவு ஐஜியாகவும், அயல் பணியில் இருந்து திரும்பிய டிஐஜி சோனல் சந்திரா சென்னை பெருநகர வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனராகவும், சென்னை பெருநகர கிழக்கு மண்டல இணை கமிஷனராக இருந்த விஜயகுமார் சென்னை மேற்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், சென்னை பெருநகர தெற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த பண்டி கங்காதர் சென்னை பெருநகர கிழக்கு மண்டல இணை கமிஷனராகவும், வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்பி ஜவகர் புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை மெட்ரோ மண்டல சிபிசிஐடி எஸ்பியாக கூடுதலாக கவனிப்பார்.
மேலும், கோவை நகர தலைமையிட துணை கமிஷனராக இருந்த சுகாசினி சென்னை பெருநகர மேற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், கோவை ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த எம்.பி.திவ்யாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கோவை நகர தலைமையிட துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 6வது பட்டாலியன் துணை கமாண்டன்டாக இருந்த ஷாஜிதாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தெற்கு மண்டல சிபிசிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
