- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- ஜெர்மனி
- இங்கிலாந்து
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
- துபாய்
- முதலமைச்சர்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் சுற்றுப்பயணமாக, இன்று காலை 9.50 மணிக்கு சென்னையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக ஜெர்மன் செல்கிறார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற பிறகு அவ்வப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார். 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை லட்சியத்தை நோக்கி தொழில்துறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு உள்ளார். 2021ம் ஆண்டு மே மாதம் முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022 மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6,100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இதன்மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5வது முறையாக இன்று (30ம் தேதி) காலை சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதலீடுகளை ஈர்க்க உள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதி (நாளை) ஜெர்மனியில் உள்ள அயலக அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
செப்டம்பர் 1ம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் செல்கிறார். செப்டம்பர் 2 அல்லது 3ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்முனைவோர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 4ம் தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, தந்தை பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரண்டு நூல்களையும் வெளியிடுகிறார். செப்டம்பர் 6ம் தேதி லண்டனில் உள்ள தமிழர் நல வாரியம் நடத்தும் பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். செப்டம்பர் 7ம் தேதி லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டு 8ம் தேதி அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடையும் வகையில் அவரது பயண திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
