×

எம்.டி யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ஓமியோபதி துறை ஆணையகரம் வெளியிட்ட அறிக்கை: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிப்பிற்கான காலம் 3 ஆண்டுகள், கல்வித்தகுதி தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.

கல்லூரிகளின் விவரங்கள் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் 2, அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு நாளை முதல் வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்தல் வந்து சேர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Homeopathy Department ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...