சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் அதனை தாங்கும் திறன் மாநகராட்சிக்கு உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்படும் 2 குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்க நடவடிக்கை பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் 3081 மழை நீர் வடிகால்வாய்கள் உள்ளன; தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் 1000 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. கிண்டி ரேஸ் கோர்ஸில் உள்ள 4 குளங்களின் பரப்பளவு 49,072 ச.மீ. அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 4 குளங்களின் மூலம் 8.66 மில்லியன் கன லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் ஏன் தெரிவித்தார்.
