×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் இன்று மழை பெய்யும்

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,India ,Puducherry ,Karaikal ,
× RELATED புத்தாண்டை ஒட்டி ஆனைக்கட்டி...