×

ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு நேர்முக தேர்வு

நாகர்கோவில், டிச.15: ரேஷன்கடைகளில் விற்பனையாளர், கட்டுனர் பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் நேற்று நேர்முக தேர்வு தொடங்கியது. குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. வரும் 22ம் தேதி வரை நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. 20 சான்றுகள் சரிபார்க்கும் குழுக்கள் மற்றும் 20 நேர்முகத் தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 46 விற்பனையாளர்கள், 7 கட்டுனர்கள் என்று 53 பணியிடங்களுக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும் இப்பணியிடங்களுக்கு 10, 12ம் வகுப்பு கல்வி தகுதி கூறப்பட்டிருந்த நிலையில் பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். தினசரி காலையில் 500 பேரும், மாலையில் 500 பேரும் என்று 1000 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய உறுப்பினர்கள், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கனகசுந்தரி, நாகர்கோவில் துணைப்பதிவாளர் சங்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது. கிருமிநாசினி வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றதாக மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் நேற்று நேர்முக தேர்வு தொடங்கியது. குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான நேர்முகத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. வரும் 22ம் தேதி வரை நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. 20 சான்றுகள் சரிபார்க்கும் குழுக்கள் மற்றும் 20 நேர்முகத் தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 46 விற்பனையாளர்கள், 7 கட்டுனர்கள் என்று 53 பணியிடங்களுக்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும் இப்பணியிடங்களுக்கு 10, 12ம் வகுப்பு கல்வி தகுதி கூறப்பட்டிருந்த நிலையில் பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். தினசரி காலையில் 500 பேரும், மாலையில் 500 பேரும் என்று 1000 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு கன்னியாகுமரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய உறுப்பினர்கள், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கனகசுந்தரி, நாகர்கோவில் துணைப்பதிவாளர் சங்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர். நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டது. கிருமிநாசினி வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றதாக மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.

Tags : ration shops ,
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...