- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- முதல் அமைச்சர்
- திரிணமுல்
- சத்ரா
- பரிஷத்
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- மேற்கு வங்கம்
- பாஜக
- வங்காளிகள்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான திரிணமூல் சத்ர பரிஷத்தின் நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது: பாஜ நாடு முழுவதும் வங்காளிகள் மீது ‘‘மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில், மேற்கு வங்கத்தில் நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழுக்களை கணக்கெடுப்புகளை நடத்த பாஜ அனுப்பி வைத்துள்ளது. யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புகளுக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம். அவர்கள் அந்தத் தரவைப் பயன்படுத்தி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். அதற்கு பதிலாக, வாக்குச் சாவடிகளில் நேரடியாகச் சரிபாருங்கள். நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விட மாட்டேன். இவ்வாறு கூறினார்.
