புதுடெல்லி: பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கனவே 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. அதுதவிர வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது.சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிக்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் கடந்த 18ம் தேதி வெளியிட்டது. இந்த சலுகை செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
