ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பஸ்தார், தண்டேவாடா, பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வருவாய் துறை அமைச்சர் டேங்க் ராம் வர்மா கூறுகையில், ‘‘வெள்ளம் எட்டு உயிர்களை கொன்றது. 96 கால்நடைகள் இறந்துபோயின. 495 வீடுகள் மற்றும் 16 மதகுகள் சேதமடைந்துள்ளது” என்றார். இதனிடையே தென்கொரியா சென்றுள்ள மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்துதரும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
