×

இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் 4 ஆயிரம் மனு அளித்தனர் பொதக்குடி ஊராட்சி சாலை படுமோசம்

நீடாமங்கலம், டிச.15: நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி ஊராட்சியில் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி ஊராட்சியில் பொதக்குடி காந்தி காலனி முதல் ஆய்குடி வரை இணைப்பு சாலை, காந்தி காலனி , காதரியா தெரு, ஜாவியா தெரு, சிந்தாமதார் தெரு, பதுரியாதெரு, சவுக்கத் அலி தெரு, முஹம்மதியா தெரு, அஹம்மதியா தெரு, நூரியா தெரு, கரிமியாதெரு, மதினா தெரு ஆய்குடி சாலை ஆகிய 10க்கும் மேற்பட்ட தெருக்களில் இணைப்புச் சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சந்தித்துப் பல முறை புகார் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கைகள் இல்லை. நிவர் புயல் மற்றும் புரெவி புயலில் கனமழை பெய்ததால் பொதக்குடி ஊராட்சிக்களில் பல சாலைகள் சரீப் தெரு, ஜலால் தெரு, கீழத்தெரு, மேலத்தெரு, அப்துல்லா தெரு, அபுல்காலாம் ஆசாத் தெரு, புது தெரு, வள்ளுவர் தெரு, போன்ற தெருகள் எல்லாம் மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சேறும் சகதியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Tags : E. Communist Party ,Pothakudi Panchayat Road ,
× RELATED தமிழக பள்ளி கல்வித்துறையின் சார்பில்...