×

தேவகோட்டை அருகே பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள்

தேவகோட்டை, ஆக.29: திருச்சி-ராமேஸ்வரம் பைபாஸ் சாலையில் தேவகோட்டை சிவந்தான்கோட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரே சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணமாக இந்த இடத்தில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு என தனியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சாலையில் நடுவில் சிறிய அளவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் போதிய அளவில் வெளிச்சமும் மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பதாகைகள் இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் இரவில் தடுப்பு சுவரில் மோதி தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. சமூக ஆர்வலர் புளியால் ஆனந்த் கூறுகையில், இந்த இடத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க வேண்டும் அல்லது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரை அகற்றி இரவில் ஒளிரும் விளக்கு மற்றும் மிளிரும் பதாகைகள் வைக்க வேண்டும். அப்போது தான் சாலை விபத்துகளும் உயிரிழப்பும் தவிர்க்கப்படும் என்றார்.

Tags : Bypass Road ,Devakot ,Devakottai ,Thiruchi-Rameswaram bypass road ,Petrol Punk Opposite Road ,Devakottai Sivantankot ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா