×

கோயிலுக்கு அருகில் எந்த கட்டுமானங்களையும் அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: கோயிலுக்கு அருகில் எந்த கட்டுமானங்களையும் அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன் வணிக வளாகம் கட்ட எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டம் உள்ளதா?. பெரிய கோயில்களை பராமரிக்க தேவஸ்தானம் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய நேரமிது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் செப்.7க்கு ஒத்திவைத்தது.

Tags : Chennai ,High Court ,Madras High Court ,Rajagopuram ,Arunachaleswarar Temple ,Tiruvannamalai ,Rajagopuram… ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...