×

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

 

சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் தெற்கு ஒரிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, காலை 8.30 மணி அளவில் சட்டீஸ்கர் பகுதிகளில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,northwest Bay of Bengal ,Odisha ,
× RELATED நெல்லையில் பிரம்மாண்டமாக உருவாகி...