×

சமையல் எண்ணெய் சில்லரை விற்பனையை நீட்டிக்க வேண்டும்: சங்கத்தினர் வலியுறுத்தல்

மதுரை, டிச.15: சமையல் எண்ணெய் சில்லரை விற்பனை செய்ய ஓராண்டு காலம் நீட்டிப்பு வழங்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மதுரை ஆயில் சீட்ஸ் சங்க தலைவர் மகேந்திரன், முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்  உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் சிவஞானத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உணவு எண்ணெய் தொழிலை சார்ந்துள்ள பல லட்சக்கணக்கான சிறிய, நடுத்தர, மொத்த சில்லரை வணிகர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருகின்றனர்.
திருமணங்கள், ஓட்டல்கள், கோயில் திருவிழாக்கள், ஸ்நாக்ஸ் தயாரிப்புகள் என வணிகம் முழுமையாக செயல்படாத காரணத்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது.

தற்போது பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சில்லரையாக சமையல் எண்ணெய் விற்பனை தடை செய்யப்பட்டால் பிளாஸ்டிக் கழிவுகள் தான் குப்பைகளாக மிக அதிகஅளவில் சேரும். சில்லரை சமையல் எண்ணெய் நுகர்வோர் வாங்கும்போது நிறம், தரம், மணம், சுவை பார்த்து வாங்க இயலும். பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியா முழுவதும் சில்லரை விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதுள்ள கொரேனா நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமையல் எண்ணெய்யை சில்லரை விற்பனை செய்ய ஓராண்டு காலம் நீட்டித்து வரும் 2021ம் டிச.31ம் தேதி வரை அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர். 

Tags : Associations ,
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...