×

நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று (ஆக 28) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : Nilgiri district ,Weather Survey Center ,Chennai ,Chennai Meteorological Centre ,Bengal Sea ,Tamil Nadu ,Puduwa ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...