×

மதுரை ஆவினில் தயாரிப்பு பொங்கல் பை திட்டத்திற்கு 2.52 லட்சம் நெய் பாட்டில்

மதுரை, டிச.15:  தமிழக அரசின் பொங்கல் பை திட்டத்திற்கு மதுரை ஆவினில் 100 மிலி வீதம் 2.52 லட்சம் நெய் பாட்டில்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயலின் காரணமாக முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு 500 கிராம் பால் பவுடர் ஆவின் சார்பாக வழங்கப்பட்டது. மதுரை ஆவினில் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 19 மெட்ரிக் டன் பால் பவுடர் 500 கிராம் பாக்கெட்டுகளாக தயார் செய்யப்பட்டு புயல் பாதித்த இடங்களுக்கு அனுப்பப்பட்டது.

தமிழக அரசின் பொங்கல் பை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஆவின் மூலம் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் 100மிலி நெய் பாட்டில்கள் தயாரித்து மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களுக்கு வழங்க  பால்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை 90 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ஒரு லட்சத்து 62 ஆயிரம் நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி துரிதமாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது என மதுரை ஆவின் பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Madurai Avinil ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்