நெல்லை: வடக்கு ரயில்வே பகுதிகளில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் காரணமாக நெல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ் பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ரயில்வேக்கு உட்பட்ட கதுரா- மாதாபூர் ரயில் நிலையங்களுக்கு இடையே கனமழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (28ம் தேதி) புறப்பட வேண்டிய ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா செல்லும் அந்தமான் எக்ஸ்பிரஸ் (எண்.16031) முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து புறப்பட்டுச் சென்ற மாதா வைஷ்ணவ் தேவி கத்ரா எக்ஸ்பிரஸ் டில்லி முதல் வைஷ்ணவ் தேவ் கத்ரா வரை பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
