×

எதிர்கால போர்கள் 5 ஆண்டு கூட நீடிக்கலாம் : ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

மவ்: மத்தியபிரதேச மாநிலம் மவ் நகரில் உள்ள ராணுவ போர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று உரையாற்றினார். அப்போது, “இந்தியா யாருடைய நிலத்தையும் விரும்பவில்லை. ஆனால் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க எந்தஒரு எல்லைக்கும் செல்ல இந்தியா தயாராக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் போர் என்பது திடீரென ஏற்பட கூடியதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி விட்டது. எந்த போர் எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். எந்தவொரு போரும் இரண்டு, நான்கு மாதங்கள், ஒரு வருடம், இரண்டு வருடம் அல்லது ஐந்து வருடங்கள் கூட நீடிக்கலாம்.

இந்த போர்களில் அதிக வீரர்கள் இருப்பதாலேயோ, ஆயுத பலத்தாலேயோ வெற்றி பெற முடியாது. மேலும், சைபர் தாக்குதல்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள், டிரோன் மற்றும் செயற்கை கோள் போன்றவை போர்களை வடிவமைக்கின்றன. இத்தகைய எந்தவொரு சூழலையும் சமாளிக்க இந்திய ராணுவம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அனைத்து வகையான பாதுகாப்பு சவால்களுக்கும் இந்திய ஆயுத படைகள் தயாராக இருக்க வேண்டும் ” என்றார்.

Tags : Union Minister ,Rajnath Singh ,Mau ,Union Defense Minister ,Army ,War College ,Mau, Madhya Pradesh ,India ,
× RELATED வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்..!!