×

50% வரி-பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி. கடிதம்

திருப்பூர்: அமெரிக்காவின் 50% வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கடிதம் எழுகியுள்ளார். அதில்; அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் ரூ.15,000 கோடி வருவாய் இழப்பு, 2 லட்சம் வேலையிழப்பு ஏற்படும். பின்னலாடை தொழிலை பாதுகாக்க நிதி தொகுப்பை அறிவிக்க வேண்டும். அனைத்து மூலப்பொருள்களுக்கான இறக்குமதி வரியை நிறுத்தி வைக்க வேண்டும். பருத்திக்கு அறிவித்த தற்காலிக இறக்குமதி வரி விலக்கை நிரந்தரமாக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு இலவச மின்சாரம், போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags : Tiruppur ,PM Modi ,US ,Subarayan ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...