- கே. பரமத்தி
- ஆகா
- கோர்பாய்
- முத்தன்
- காசிபாலியம் காலனி
- பஞ்சாய்கலத்திரிச்சி, கரூர் மாவட்டம்
- கரூர்
- தேசிய நெடுஞ்சாலை
க.பரமத்தி, ஆக. 27: கார்பைக் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். கரூர் மாவட்டம் புஞ்சைகாளகுறிச்சி அருகே காசிபாளையம் காலனியை சேர்ந்தவர் முத்தன்(65). இவர். சொந்த வேலையாக ஊரில் இருந்து பைக்கில் தேசிய நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி சென்றுள்ளார். அப்பொழுது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.
படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் முத்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். விது காரை ஓட்டிவந்த திருப்பூர் பாலசுப்பிரமணியன் மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
