- அமெரிக்கர்கள்
- கால்செண்டர்
- பஞ்சாப்
- புது தில்லி
- ஜிகர் அகமது
- யஷ் குரானா
- இண்டர்ஜித்
- பாலி
- டிஜ்காப்ஸ்
- கால்சா
- கல்லூரி
- அமிர்தசர், பஞ்சாப் மாநிலம்
புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கால்சா பெண்கள் கல்லூரிக்கு எதிரே உள்ள குளோபல் டவர்ஸ் கட்டிடத்தில் டிஜிகேப்ஸ் என்ற பெயரிலான கால் சென்டரை ஜிகர் அகமது, யாஷ் குரானா, இந்தர்ஜித் சிங் பாலி உள்ளிட்டோர் நடத்தி வந்துள்ளனர். இந்த சட்ட விரோத கால்சென்டர் மூலம் அமெரிக்க குடிமக்களிடம் ரூ. 350 கோடி மோசடி செய்துள்ளனர். தொழில்நுட்ப ஆதரவு அளிப்பதாக கூறி அமெரிக்க குடிமக்களை ஏமாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து அனுமதியின்றி பணத்தை எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த பணத்தை பல வெளிநாடுகளுக்கு அனுப்பி, அங்கிருந்து பல்வேறு கணக்குகள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2023 மற்றும் 2025 க்கு இடையில் 350 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் அமிர்தசரஸ் மற்றும் டெல்லியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து சைபர் கிரைம் கும்பலை சேர்ந்த ஜிகர் அகமது, யாஷ் குரானா, இந்தர்ஜீத் சிங் பாலியை சிபிஐ கைது செய்துள்ளது.
