புதுடெல்லி: துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டுநாள் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அமித் ஷா, “எல்லைப்பகுதிகளில் மக்கள்தொகையில் மாற்றங்கள் வேண்டுமென்றே, திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. இது நாட்டின் எல்லைப்பாதுகாப்பை நேரடியாக பாதிக்கின்றன.
எல்லைப்புற மாவட்டங்களில் நடக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அந்தந்த எல்லை மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைகளில் இருந்து 30 கிமீ தொலைவில் உள்ள அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும். இந்த பிரச்னைகளில் தலைமை செயலாளர்கள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினரும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
