×

தமிழகத்தை பின்பற்றி பஞ்சாப் பள்ளிகளிலும் விரைவில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்: முதல்வர் பகவந்த் மான் பேச்சு

சென்னை: தமிழகத்தை பின்பற்றி பஞ்சாப் மாநில பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரைவில் தொடங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார். மயி​லாப்​பூர் புனித சூசையப்​பர் தொடக்​கப்​பள்​ளி​யில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இணைந்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: காலை உணவுத் திட்டம் போல் சிறந்தது வேறெதுவும் இல்லை. பசியுடன் வரும் குழந்தைகளால் படிக்க முடியாது. தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவர விரும்புகிறேன். சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. குழந்தைகளின் உடல்நலத்தில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது.

பஞ்சாபில் அனைத்து நகரங்களிலும் தென்னிந்திய உணவுகளான உப்புமா, தோசை போன்றவை விற்கப்படுகிறது. தென்னிந்திய உணவுகள் தேசிய உணவு போல், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. பஞ்சாப் உணவுகள் தமிழகத்திலும் விற்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி, சுகாதாரத்துக்கு பஞ்சாப் அரசும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. காலை உணவு திட்டம் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் என ஒரு மாணவருக்கு ரூ.30 வீதம் பயனடைந்து வருகின்றனர். இது மிகப்பெரிய சாதனை. கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசு கவனித்து வருகிறது. ஆரோக்கியம் நன்றாக இருந்தால் தான் குழந்தைகள் கல்வியை கற்றுக்கொள்ள முடியும்.

ஆம் ஆத்மி கிளினிக்குகளில் 70,000 பேர் நாள்தோறும் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள். நாளையே பஞ்சாப் அமைச்சரவையில் காலை உணவுத் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளேன். மேலும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம், அவர்களால்தான் நாடு முன்னேறும். அப்போதுதான் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும், வெறும் பேச்சுகளால் முடியாது. பஞ்சாப் மாநிலம் என்பது பகத்சிங், ராஜகுரு போன்றவர்கள் வீர மரணம் அடைந்த மண், அதனை பார்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக பஞ்சாப் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Punjab ,Tamil Nadu ,CM ,Bhagwant Mann ,Chennai ,Chief Minister ,Mylapore St. ,Susaiyappar ,Dodakappalli ,M.K. Stalin ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...