சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் முதல்வராக சவுந்தரராஜன் பணியாற்றி வந்தார். இவர் ரூ.5 கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் செய்திருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது. இதன் காரணமாக, சவுந்தரராஜன் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இதில் சிக்கிய 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
