×

அரவக்குறிச்சி மாஜி எம்எல்ஏ மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் உறுப்பினர் கலிலூர் ரஹ்மான் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். சிறந்த பணியால் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று விளங்கியதோடு, சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் திகழ்ந்தார். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல, மமக தலைவர் ஜவாஹிருல்லாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Aravakurichi ,Chennai ,Tamil Nadu ,Kalilur Rahman ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...