×

வங்கிகளில் வரிசையில் நிற்காமல் செல்ல முன்னுரிமை வேண்டும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழநி, டிச. 15: வங்கிகளில் வரிசையில் நிற்காமல் செல்ல முன்னுரிமை வழங்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. பழநி ஒன்றிய தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்டத் தலைவர் செல்வநாயகம், உயரம் தடைபட்டோர் மாநில செயலாளர் வெங்கடேஷ் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஒன்றிய தலைவராக சதீஷ்குமார், செயலாளராக கண்ணுச்சாமி, பொருளாளராக மூகாம்பிகை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் பழநி ஒன்றியத்தில் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, பாலசமுத்திரம், ஆயக்குடி உள்ளிட்ட கிராமங்களில் செயல்படும் வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செல்வதற்கு கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகன் அனைவருக்கும் ஏடிஎம் வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வங்கிகளில் வரிசையில் நிற்காமல் செல்ல முன்னுரிமை அளிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் வரும் 30ம் தேதி அந்தந்த வங்கிகளின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்