×

கக்குச்சி, உல்லத்தி, கடநாடு ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகயை கலெக்டர் ஆய்வு

ஊட்டி, டிச. 11: கக்குச்சி, உல்லத்தி மற்றும் கடநாடு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடி மதிப்பில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கக்குச்சி ஊராட்சியில் ரூ.27.40 லட்சத்தில் தொட்டண்ணி மட்டம் முதல் மேல் அஜ்ஜூர் வரை முடிக்கப்பட்ட சாலை பணி, தொட்டபெட்டா ஊராட்சியில் ரூ.19.56 லட்சத்தில்  கேந்திர வித்யாலயா பள்ளி முதல் எச்.பி.எப். இந்துநகர் குடியிருப்பு வரை மேம்படுத்தப்பட்ட சாலை பணி, தும்மனட்டி ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில்  முடிக்கப்பட்ட பூங்கா மற்றும் ரூ.10 லட்சத்தில்  முடிக்கப்பட்ட உடற்பயிற்சிகூடம், உல்லத்தி ஊராட்சியில் ரூ.13.83 லட்சத்தில் அத்திக்கல் சாலை முதல் கடசோலை சாலை வரை மேம்படுத்தப்பட்ட சாலை பணி, ரூ.2 லட்சத்தில்  செக்டேம் குழாய் அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அழகர்மலை பகுதியில் ரூ.14 லட்சத்தில் தலைக்குந்தா தெப்பக்காடு சாலை முதல் அழகர்மலை சாைல வரை மேம்படுத்தப்பட்ட சாலை பணி, ரூ.2.33 லட்சத்தில் நடைபாதையுடன் கூடிய சுற்றுசுவர் கட்டும் பணி, ரூ.3.50 லட்சத்தில் புண்ணியமூர்த்தி வீடு முதல் அங்கன்வாடி மையம் வரை நடைபாதையுடன் கூடிய சுற்றுசுவர் பணி, ரூ.49.58 லட்சத்தில் சமுதாய கூடம் பழுது பார்க்கும் பணி, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, நடைபாதையுடன் கூடிய தடுப்புச்சுவர் பணி, கடநாடு ஊராட்சியில் ரூ.24.40 லட்சத்தில் மல்லிக்கொரை சாலை பணி என மொத்தம் ரூ.1.60 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, செயற்பொறியாளர் சுஜாதா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தரன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Collector ,Ullatti ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...