×

தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படை பிரிவுக்கு புதிதாக இரு நாய்க்குட்டிகள்

*எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் வழங்கல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படை பிரிவிற்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் புதிதாக இரு நாய்க்குட்டிகளை வழங்கியதோடு சிறப்பாக பயிற்சி அளிக்குமாறு காவலர்களுக்கு அறிவுரை கூறினார். தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படை பிரிவிற்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் 2 புதிய நாய்க்குட்டிகளை வழங்கினார்.

அப்போது, அவர் நாய்க்குட்டிகளை நன்றாக பராமரித்து, போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்டறியும் நுண்ணறிவு ஆகியவற்றில் திறம்பட விளங்க பயிற்சி அளிக்குமாறு மோப்பநாய் படை பிரிவு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, தூத்துக்குடி தலைமையிடத்து ஏ.டி.எஸ்.பி. ஆறுமுகம், மோப்பநாய் படை பிரிவு சார்பு ஆய்வாளர் குமார் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

Tags : Thoothukudi District Sniffer Dog Unit ,S.P. Albert John ,Thoothukudi ,Thoothukudi District Sniffer Dog Unit… ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...