×

ஷூவில் இருந்த பாம்பு மாணவனை கடித்தது

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த தொழுதூர் வஉசி நகரை சேர்ந்த கண்ணன் -ராதா தம்பதியின் மகன் கௌசிக் (12), அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு செல்வதற்காக சீருடை அணிந்து ஷூவை போட்டபோது அதில் மறைந்திருந்த பாம்பு கௌசிக்கை கடித்தது. அலறியபடி மயங்கி விழுந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் திருச்சிதனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Thittakudi ,Kaushik ,Kannan ,Radha ,Thozhudur Vausi Nagar ,Ramanathapuram ,Cuddalore district ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...