- இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்
- சிம்லா
- ஹிமாச்சல பிரதேசம்
- பஞ்சாப்
- காங்க்ரா
- சம்பா மாவட்டங்கள்
- காங்க்ரா,
- ஹமீர்பூர்…
சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தொடர் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் நேற்று மிதமானது முதல் கனமழை பெய்தது. காங்க்ரா மற்றும் சம்பா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. காங்க்ராவில் தொடர் மழை காரணமாக ஹமீர்பூரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்தது. இதேபோல் ஒன்று மற்றும் இரண்டாவது வார்டுக்குட்பட்ட பகுதிகளும் மழை நீரில் தத்தளித்தன. சிம்லா மாவட்டத்தின் துட்டிகண்டி பகுதியில் வீட்டின் தடுப்பு சுவார் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக பல்வேறு கிராமங்களிலும் சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.மழை எதிரொலியாக 8 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 685சாலைகள் போக்குவரத்து இன்றி மூடப்பட்டது. இதனிடையே பஞ்சாபிலும் இடைவிடாது மழை பெய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து உஜ், ராவி ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் பஞ்சாபின் பதன்கோட் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
