×

பீகார் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச மறுப்பு ராகுல்காந்தி கர்வம் பிடித்தவர்: பாஜ விமர்சனம்

புதுடெல்லி: பீகார் மாநிலம் அராரியாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்வும் உடன் இருந்தார். அப்போது செய்தியாளர்கள் பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, அனைத்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவோம். முடிவுகள் நன்றாக இருக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ராகுலின் இந்த செயலை பாஜ விமர்சித்துள்ளது. இது குறித்து பாஜவின் ஐடி துறை தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் தள பதிவில், கூறுகையில், ‘‘பீகாரில் காங்கிரஸ் கட்சியானது ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சார்ந்தது. ஆர்ஜேடி கூட்டணியை முறித்துக்கொண்டால், காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தக்கூட முடியாமல் போகலாம். ஆனால் ராகுல்காந்தியின் ஆணவத்தை பாருங்கள். தேஜஸ்வி யாதவ் தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா என்பதை கேட்டபோது அந்த கேள்வியை தவிர்த்துவிட்டார். மறுபுறம் தேஜஸ்வி ராகுலை ஒரு கைப்பாவையை போல பின்தொடர்கிறார்” என்றார்.

Tags : Rahul Gandhi ,Bihar ,CM ,BJP ,New Delhi ,Lok Sabha ,Araria, Bihar ,Rashtriya Janata Dal ,Tejashwi Yadav ,Bihar… ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...