×

வீரபாண்டி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை 8.58 லட்சம் ரூபாய்

தேனி, டிச. 11: தேனி அருகே, வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 8 நாட்கள் திருவிழா சிறப்பாக நடக்கும். இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசிப்பர். இந்த திருவிழாவின்போது கோயில் வளாகத்தில் தற்காலிக உண்டியல்கள் வைக்கப்படும்; மற்ற நாட்களில் நிரந்தர உண்டியல்கள் மட்டும் இருக்கும். இவைகளில் சேரும் காணிக்கைகளை 3 மாதத்திற்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதிக்கு பிறகு மூன்று மாதம் கழித்து நேற்று முன்தினம்   கவுமாரியம்மன் கோவில் உண்டியல் வசூல் எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள்  முன்னிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் விஜயன் தலைமையில்  நடந்தது. இதில் ரூ.8 லட்சத்து. 58 ஆயிரத்து 830. ரொக்கப் பணமும், 76 கிராம் தங்கம் மற்றும்  19 கிராம் வெள்ளி இருந்தது.

Tags : Veerapandi Mariamman Temple ,
× RELATED வீரபாண்டி மாரியம்மன் கோயிலில்...