×

ரீல்ஸ் மோகம் உயிரைப் பறித்தது; வெள்ளத்தில் சிக்கிய யூடியூபர் மரணம்: கயிறு வீசியும் காப்பாற்ற முடியவில்லை

புவனேஸ்வர்: ஒடிசாவில் யூடியூப் சேனலுக்காக நீர்வீழ்ச்சியின் நடுவே நின்று ரீல்ஸ் எடுத்த இளைஞர், திடீரென அணையில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூரைச் சேர்ந்த யூடியூபர் சாகர் டுடு (22), தனது நண்பர் அபிஜித் பெஹராவுடன் கட்டாக்கிலிருந்து கோராபுட் மாவட்டத்திற்கு சுற்றுலாத் தலங்களைப் பற்றி தனது யூடியூப் சேனலுக்காக வீடியோ எடுக்க வந்துள்ளார். லாம்டாபுட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மச்சகுண்டா அணையில் இருந்து சுமார் 2,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரையோர மக்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் துடுமா நீர்வீழ்ச்சியில் ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி யூடியூபர் சாகர் ரீல்ஸ் பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால், சாகர் நீர்வீழ்ச்சியின் நடுவே இருந்த பாறையில் சிக்கிக்கொண்டார். அங்கிருந்த உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கயிறுகளை வீசி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், அதிவேகமாகப் பாய்ந்த வெள்ளம் அவரை அடித்துச் சென்றது. தகவலறிந்து மசகுண்டா போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாகரின் உடலை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : YouTuber ,Bhubaneswar ,Odisha ,YouTube ,Sagar Dudu ,Berhampur, Odisha ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...