- கனிமொழி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- கனிமொழி எம்.பி.
- முப்பெரும் விழா
சென்னை: ‘பெரியார்’ விருதுக்கு தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: திமுகவின் சார்பில் முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் பெரியார் விருதுக்கு என்னை தேர்வு செய்திருக்கும் திமுக தலைவர்-முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தலைமைக் கழகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆண்டுக்கான, அண்ணா விருதுக்கு தேர்வாகி இருக்கும் தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினர் சுப.சீத்தாராமனுக்கும், கலைஞர் விருதுக்கு தேர்வாகியிருக்கும் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர் சோ.மா.ராமச்சந்திரன், பாவேந்தர் விருது பெறும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது பெறும் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர் மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது பெறும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
