×

வட மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு இன்று உருவாகிறது: மழை நீடிக்கும்

சென்னை: ஒடிசா- மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகும் வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இன்று முதல் 30ம் தேதி வரையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை இன்று முதல் 28ம் தேதி வரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும். மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் இன்று முதல் 28ம் தேதி வரை வீசும், என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : North West Bay of Bengal ,Chennai ,Odisha-West Bengal ,Tamil Nadu ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...