×

குஜராத்தின் கட்ச் எல்லையருகே பாக். மீனவர்கள் 15 பேர் கைது: எல்லை பாதுகாப்பு படை அதிரடி

புஜ்: குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள கோரி கழிமுகம் எல்லை புறக்காவல் நிலையம் அருகே அடையாளம் தெரியாத படகு ஒன்று நிற்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது அந்த பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த 15 மீனவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  மேலும், இயந்திரம் பொருத்தப்பட்ட ஒரு நாட்டு படகு, படகில் இருந்த சுமார் 60 கிலோ மீன்கள், ஒன்பது மீன்பிடி வலைகள், டீசல், ஐஸ், உணவுப்பொருள்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Gujarat's Kutch border ,Border Security Force ,Bhuj ,Kori Ghazimugham border outpost ,Gujarat's Kutch region ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது